Home நாடு பினாங்கில் நிர்வாண விளையாட்டு விழாவா? – லிம் குவான் மறுப்பு!

பினாங்கில் நிர்வாண விளையாட்டு விழாவா? – லிம் குவான் மறுப்பு!

721
0
SHARE
Ad

nudesportsஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 5  – பினாங்கு தீவில் நிர்வாண விழாக்கள் நடைபெறுவதாகக் கூறப்படுவதை அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் முற்றிலும் மறுத்துள்ளார்.

அது போன்ற முறையற்ற கடற்கரை நிகழ்வுகளுக்கு பினாங்கு மாநிலத்தில் அனுமதி அளிக்கப்படுவதில்லை என்றும் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பினாங்கு தீவில் நடைபெற்றதாகக் கூறப்படும் “மலேசிய அனைத்துலக நிர்வாண விளையாட்டு விழா 2014” என்ற நிகழ்வு குறித்து லிம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து லிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பினாங்கு தீவில் இது மிக முக்கியமான ஒன்றாகும். இங்கே சூதாட்ட மையம் கட்டுவதற்கு கூட அனுமதி அளிக்கவில்லை, அவ்வாறு இருக்கையில் எப்படி இப்படியொரு முறையற்ற விழாவிற்கு அனுமதி வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

18 பேர் கொண்ட குழு ஒன்று நிர்வாணமாக வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற 5.5 நிமிட காணொளி ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது.

அந்த காணொளி பினாங்கு தீவிலுள்ள, தெலுக் பாஹாங், தாமான் நெகாராவில் கடற்கரை ஒன்றில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இந்த காணொளி குறித்து கருத்துரைத்த லிம், “இந்த நிகழ்விற்கு பினாங்கு மாநில அரசு நிச்சயம் அனுமதி வழங்கியிருக்காது என்று உறுதியாகக் கூறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும், இதில் இஸ்லாமியர்கள் பங்குபெற்றிருப்பது கண்டறியப்பட்டால், சமய அதிகாரிகளிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லிம் குறிப்பிட்டார்.

தகுந்த அனுமதியுடன் தான் இந்த நிர்வாண விழா நடத்தப்பட்டதாக, அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இயற்கை விரும்பிகள்” என்று தங்களை கூறிக்கொள்ளும் சிலர் இந்த நிர்வாண விழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த காணொளி அண்மையில் நட்பு ஊடகங்களில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.