Home தொழில் நுட்பம் சீனாவில் சியாவுமி அசுர வளர்ச்சி – மகுடம் இழக்கும் சாம்சுங்!

சீனாவில் சியாவுமி அசுர வளர்ச்சி – மகுடம் இழக்கும் சாம்சுங்!

589
0
SHARE
Ad

xiaomi_mi3பெய்ஜிங், ஆகஸ்ட் 9 – சீனாவின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் ‘சியாவுமி’ (Xiaomi) திறன்பேசிகள் ஆரம்பிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் உலக அளவில் பெரும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.

செல்பேசிகளின் தயாரிப்பில் முன்னோடிகளான ஆப்பிள் மற்றும் சாம்சுங்கின் வர்த்தகம் சியாவுமியின் அசுர வளர்ச்சியால் சிறிது தொய்வை சந்தித்துள்ளது.

samsung-galaxy-s4-vs-apple-iphoneஆசியாவில் தொழில்நுட்ப கருவிகள் உட்பட அனைத்து பொருட்களுக்கு மிகப் பெரிய வர்த்தக இடமாக திகழும்  சீனாவில், கடந்த பல ஆண்டுகளாக கோலோச்சி இருந்து வந்த சாம்சுங் நிறுவனம், சியாவுமி திறன்பேசிகளால் சறுக்கல்களைச் சந்தித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில், ஆப்பிளுக்கு ஈடான தொழில்நுட்பத்தில் திறன்பேசிகளை வழங்குவதே சியாவுமியின் வெற்றியின் முழு முதற்காரணம்.

xiaomi-chinaஇந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் ஆசியா உட்பட முக்கிய சந்தைகளில் சிறப்பான இடத்தை பெற்றுள்ள சியாவுமி திறன்பேசிகள் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை சுமார் 15 மில்லியன் திறன்பேசிகளை சீன சந்தைகளுக்கு அனுப்பியுள்ளது.

ஆனால் இதே கால அளவில் சாம்சுங் நிறுவனம் சுமார் 13.2 மில்லியன் திறன்பேசிகளையே சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, சீனாவில் பத்தில் எட்டு திறன்பேசிகள் உள்நாட்டில் தயாராகின்றன.

samsung-gear-phonesஅவற்றில் சியாவுமி 14 சதவீத பங்குகளையும் ‘லெனோவொ’ (Lenovo), ‘யுலாங்’ (Yulong), ‘ஹவாய்’ (Huawei) உட்பட 7 உள்நாட்டு நிறுவனங்கள் 65 சதவீத பங்குகளை வகிக்கின்றன. ஆப்பிள் மற்றும் சாம்சுங்கிற்கு 18 சதவீத பங்குகள் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சியாவுமி நிறுவனம், இந்த வருடத்தின் இறுதிக்குள் 60 மில்லியன் திறன்பேசிகளையும், எதிர்வரும் 2015-ம் ஆண்டில் 100 மில்லியன் திறன்பேசிகளையும் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.