Home நாடு மந்திரி பெசாராகத் தொடர சுல்தான் சம்மதம் – காலிட் அறிவிப்பு!

மந்திரி பெசாராகத் தொடர சுல்தான் சம்மதம் – காலிட் அறிவிப்பு!

517
0
SHARE
Ad

khalidகோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – பிகேஆரில் இருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து தான் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக பதவி வகிக்க சிலாங்கூர் சுல்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதின் இட்ரிஸ் ஷாவை சந்தித்த பின்னர், காலிட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்னும் தனக்கு பெரும்பான்மையான ஆதரவு உள்ளதாக இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காலிட் கூறினார்.

#TamilSchoolmychoice

“என்னுடைய விளக்கத்தை கேட்டு சுல்தான் மிகவும் திருப்தியடைந்தார். அதனால் தான் என்னை மந்திரி பெசாராக தொடரும்படி வலியுறுத்தியுள்ளார்” என்று காலிட் தெரிவித்தார்.

“மந்திரி பெசாராக என்னுடைய கடமைகளை வழக்கம்போல தொடர்ந்து செய்வேன்” என்றும் காலிட் கூறியுள்ளார்.