Home நாடு “இடைநீக்க நடவடிக்கை வருத்தம் அளிக்கவில்லை” – நீக்கப்பட்ட பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்!

“இடைநீக்க நடவடிக்கை வருத்தம் அளிக்கவில்லை” – நீக்கப்பட்ட பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்!

802
0
SHARE
Ad

PAS-Logo-Sliderபெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 15- சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசாவை ஆதரித்த பாஸ் கட்சி உறுப்பினர்கள் இருவர் அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த நடவடிக்கையானது தங்களுக்குக் கிடைத்த வெகுமதி என்றும், இதற்காக வருத்தப்படவில்லை என்றும் இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மோரிப் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் பகாருடின், உலு கிளாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாரி சுங்கிப் இருவரும் பாஸ் கட்சியிலிருந்து ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஓராண்டு இடைநீக்கம் என்பது தமக்குப் பின்னடைவு என்றாலும், பிகேஆரிடம் தான் ஆட்சி, அதிகாரம் இருக்க வேண்டும் என்ற தமது எண்ணம் நிறைவேறி உள்ளது என்று ஹன்சுல் தெரிவித்துள்ளார்.

“இல்லையேல் டான்ஸ்ரீ  காலிட்டே சிலாங்கூர் மந்திரி பெசாராக நீடித்து தனது விருப்பம் போல் செயல்பட்டிருப்பார். என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது தொடர்பான கடிதம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. எனினும் மேல் முறையீடு செய்வது குறித்து யோசித்து வருகிறேன்,” என்றார் ஹன்சுல்.

இதற்கிடையே தாம் நீக்கப்பட்டது தொடர்பான கடிதம் கிடைத்த பிறகே மேல் முறையீடு குறித்து முடிவு செய்யப் போவதாக சாரி சுங்கிப் கூறினார்.

தன்னை நீக்கியது குறித்து பாஸ் மத்திய செயலவை உறுப்பினர்களில் எவரும் இதுவரை தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், பாஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவே தொடர்ந்து செயல்படப் போவதாக தெரிவித்தார்.