Home நாடு சிலாங்கூர் மந்திரி பெசாராக அமிருடின் ஷாரி பதவி ஏற்றார்!

சிலாங்கூர் மந்திரி பெசாராக அமிருடின் ஷாரி பதவி ஏற்றார்!

1154
0
SHARE
Ad

கிள்ளான் – சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக 38 வயதான அமிருடின் ஷாரி இன்று செவ்வாய்க்கிழமை காலை பதவியேற்றார்.

சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரான அமிருடின் ஷாரி, சிலாங்கூரின் 16-வது மந்திரி பெசார் ஆவார்.

இன்று காலை இஸ்தானா ஆலம் ஷாவில், சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் முன்னிலையில் அமிருடின் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்து வந்த டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, கூட்டரசு அரசாங்கத்தில் பொருளாதார விவகார அமைச்சராகப் பதவியேற்றதால், அவருக்குப் பதிலாக மந்திரி பெசாராக அமிருடின் பதவியேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மந்திரி பெசாரின் பெயர் நேற்று வரை மிகுந்த இரகசியமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.