Home நாடு சிலாங்கூர் : 4 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக வழக்கு

சிலாங்கூர் : 4 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக வழக்கு

385
0
SHARE
Ad

ஷா ஆலாம் : நடந்து முடிந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் சிலாங்கூரில் நடைபெற்ற 4 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தொடுக்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் பக்காத்தான் ஹாரப்பான் தோல்வியடைந்த சுங்கை காண்டிஸ், தாமான் மேடான், கோம்பாக் செத்தியா, டெங்கில் ஆகியவையே அந்தத் தொகுதிகள்.

407 வாக்குகள் வித்தியாசத்தில் டெங்கில் – 167 வாக்குகள் வித்தியாசத்தில் சுங்கை காண்டிஸ், 58 வாக்குகள் வித்தியாசத்தில் கோம்பாக் செத்தியா, 30 வாக்குகள் தாமான் மேடான் – என 4 சட்டமன்றத் தொகுதிகளில் பக்காத்தான் ஹாரப்பான் தோல்வி கண்டது.