Home கலை உலகம் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்

523
0
SHARE
Ad
ஆர்.எஸ்.சிவாஜி

சென்னை : கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் “நீங்க எங்கேயோ போயீட்டீங்க சார்” என ஒவ்வொரு முறை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி ஜனகராஜைப் பார்த்துக் கூறும்போதும் திரையரங்கமே அதிரும்.

இவ்வாறு சிறு வேடங்கள் என்றாலும் பல படங்களில் தன் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இன்று சனிக்கிழமை (செப்டம்ப்ர 2) சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66.

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி நடிகர்-இயக்குநர் சந்தான பாரதியின் இளைய சகோதரருமாவார்.

#TamilSchoolmychoice

1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஆர்.எஸ்.சிவாஜி.

கமல்ஹாசனின் பல படங்களில் தவறாமல் இடம்பெறும் நடிகர்களில் ஒருவரானார் ஆர்.எஸ்.சிவாஜி. நெல்சனின் ’கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார். 2021ஆம் ஆண்டு சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நேற்று சென்னை உலக சினிமா விழாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.சிவாஜி கலந்து கொண்டிருந்தார்.