Home இந்தியா இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுகப் போர் – மோடி ஆவேசம்!

இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுகப் போர் – மோடி ஆவேசம்!

662
0
SHARE
Ad

modiகாஷ்மீர், ஆகஸ்ட் 13 – இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து பாகிஸ்தான் மறைமுக போரை நடத்திவருகிறது. போரிடும் வலிமையை பாகிஸ்தான் இழந்துவிட்டதால் இப்படி மறைமுக போரை நடத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம் சாட்டினார்.

போரை விட, இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களால் அதிக ராணுவ வீரர்களை நாம் இழந்துவிட்டோம் என்று மோடி கவலை தெரிவித்தார். தனது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாட்டு தலைவர்களை அழைத்திருந்தார் மோடி.

இதன் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சு மீண்டும் தொடங்கும் நிலை உருவானது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. அதையடுத்து மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு தனது இரண்டாவது பயணத்தை மேற்கொண்ட மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதைத் தவிர லே, லடாக் மற்றும் கார்கில்  பகுதிகளுக்கு நேற்று சென்றார்.

அங்கு ராணுவ வீரர்கள் மற்றும் விமானப் படை வீரர்களுக்கிடையே உரையாற்றினார். அப்போது மோடி கூறியதாவது;- “நமது அண்டை நாடான பாகிஸ்தான், நேரிடையாக போரிடும் வலிமையை இழந்து விட்டது. அதே நேரத்தில், தீவிரவாதிகள் மூலம் நம்மீது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இது உலகளாவிய பிரச்சனை. இருப்பினும், போரைவிட தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அதிக வீரர்களை பலி கொடுத்துள்ளோம் என மோடி பாகிஸ்தான் மீது கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.