வங்காளதேச விமானம் ஒன்று, அரபு நாடான மஸ்கட்டில் இருந்து வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவுக்கு 148 பயணிகளுடன் சென்றுள்ளது.
அந்த விமானம், கொல்கத்தா வான் எல்லையில் 33,000 அடி உயரத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டபோது, எதிரே சவுதி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானமும் அதே உயரத்தில் வந்துள்ளது.
இதைப்பார்த்த வங்காளதேச விமானத்தின் விமானி, கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு தனது விமானத்தின் பறக்கும் உயரத்தை 29,000 அடியாக குறைத்துள்ளார்.
இதையடுத்து, கட்டுப்பாட்டறையின் உத்தரவின் பேரில், மீண்டும் 33,000 அடி உயரத்தில் பயணிகள் விமானம் பறந்ததால் வெறும் 1,000 அடி உயர வித்தியாசத்தில் இரு விமானங்களும் கடந்து சென்றுள்ளன.
மேலும், விமான மோதல் தவிர்க்கப்பட்டதோடு, பயணிகள் விமானத்தை ஓட்டிய விமானியின் சாமர்த்தியத்தால் 148 பயணிகள் உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.