Home நாடு கசானாவின் முடிவால் மாஸ் நிலைமை மேலும் மோசமாகும் – மகாதீர்

கசானாவின் முடிவால் மாஸ் நிலைமை மேலும் மோசமாகும் – மகாதீர்

572
0
SHARE
Ad

Mahathirகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 –  மலேசியா ஏர்லைன்ஸின் 100 விழுக்காடு பங்குகளையும் வாங்கப்போவதாக அண்மையில் கசானா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

தனியார் மயமாக்கும் எண்ணத்தோடு கசானா எடுத்துள்ள இந்த முடிவால் பணம் மட்டுமே வீணாகும் என்றும், எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மகாதீர் தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மாஸ் நிறுவனத்தில் 70 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள கசானா நிறுவனம், மொத்த பங்குகளையும் வாங்குவதால் எந்த பயனும் இல்லை. புதிதாக சேரும் சிலர், நல்ல சம்பளத்துடன், ஊக்கத்தொகையை வாங்கிக் கொண்டிருப்பார்கள் அவ்வளவு தான் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், 70 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கும் போதே பெரிதாக ஒன்றும் செயல்படுத்த முடியாத கசானா நிறுவனம் 100 விழுக்காடு பங்குகளை வாங்கி பெரிய மாற்றத்தையெல்லாம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.