Home இந்தியா நாடாளுமன்ற துணைத் தலைவராகிறார் அதிமுக தம்பிதுரை!

நாடாளுமன்ற துணைத் தலைவராகிறார் அதிமுக தம்பிதுரை!

598
0
SHARE
Ad

thambidurai-mp-admkடெல்லி, ஆகஸ்ட் 13 – நாடாளுமன்ற துணைத் தலைவராக அதிமுக முன்னாள் மத்திய அமைச்சர் எம். தம்பிதுரை (67) இன்று (புதன்கிழமை) முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாடாளுமன்றத் தலைவராக சுமித்ரா மகாஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவியை காங்கிரஸுக்கே வழங்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அதை ஏற்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் மறுத்தனர். இதையடுத்து, 37 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக குழுத் தலைவரான தம்பிதுரையை நாடாளுமன்ற துணைத் தலைவர் பதவிக்கு அமர்த்த பாஜக திட்டமிட்டது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக பாஜக தலைவர்கள் அதிமுக தலைவர்களுடன் கடந்த சில நாட்களாகப் பேசி வந்தனர். ஆனால், துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் போட்டியிடக் கூடும் என்று கூறப்பட்டதால் இந்த விவகாரத்தில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பாக நாடாளுமன்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற மரபுகளின்படி அந்தப் பதவிக்கான தேர்தல் இன்று (புதன்கிழமை ஆகஸ்ட் 13) நடைபெறும் என்று சுமித்ரா மகாஜன் கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்.

THAMBIDURAIஇதையடுத்து, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் தம்பிதுரையின் பெயரை அதிமுக உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

அதைத் தொடர்ந்து, தம்பிதுரையை முன்மொழிந்து பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் முன்மொழிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், எல்.கே. அத்வானி ஆகியோர் வழிமொழிந்து மனு தாக்கல் செய்தனர்.