Home தொழில் நுட்பம் விண்டோஸ் போன் 7 பயனர்களுக்கு ஸ்கைப்பின் சேவை இனி இல்லை!

விண்டோஸ் போன் 7 பயனர்களுக்கு ஸ்கைப்பின் சேவை இனி இல்லை!

572
0
SHARE
Ad

Windows phone 8.1கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புகழ்பெற்ற செயலியான ஸ்கைப்‘ (Skype)-ன் செயல்பாட்டை முதல் தலைமுறை திறன்பேசிகள், பழைய பதிப்பு மேக் கணினிகளில் இருந்து நிறுத்துகின்றது.

உலக அளவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் பெயர் பெற்ற நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டிற்கு பெரும் புகழும், இலாபமும் சேர்த்த செயலி ஸ்கைப். காணொளி அழைப்புகள் மூலம் எந்த நாட்டில் இருந்தும் பயனர்கள் மற்றவர்களுடன் பேசவும், அழைப்புகளை ஏற்படுத்தவும் முடியும். உலகை ஒற்றைச் செயலியில் சுருக்கிய பெருமை மைக்ரோசாஃப்ட்டிற்கு உண்டு.

இந்நிலையில் ஸ்கைப் பயனர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக புதிய திறன்பேசிகள், மேம்படுத்தப்பட்ட இயங்குதளம் கொண்ட கணினிகள் மற்றும் புதிய மேக்களில் மட்டுமே ஸ்கைப் செயலியை பயன்படுத்த முடியும் என மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த புதிய மாற்றம் இன்னும்  சில வாரங்களில் நடைமுறைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. அப்படி நடைமுறைக்கு வந்தால் விண்டோஸ் போன் 7 பயனர்கள் ஸ்கைப்பை பயன்படுத்த புதிய திறன்பேசிகளையே வாங்க வேண்டி இருக்கும்.

இது பற்றி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் வலைப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ஸ்கைப்பின் பயன்பாடு சிறந்ததாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். அதன் காரணமாகவே இந்த புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வருகின்றது” என்று கூறியுள்ளது.

எனினும் ஆப்பிளின் ஐஒஎஸ் 6 மற்றும் அண்டிரோய்டு 2.3 பதிப்புகளைக் கொண்ட திறன்பேசிகளுக்கு ஸ்கைப்பின் செயல்பாடு தொடரும் என்று கூறப்படுகின்றது.