Home உலகம் பாகிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்பிய விவகாரம் – இலங்கைக்கு ஐ.நா. கண்டனம்!

பாகிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்பிய விவகாரம் – இலங்கைக்கு ஐ.நா. கண்டனம்!

552
0
SHARE
Ad

srilanka1ஜெனீவா, ஆகஸ்ட் 13 – இலங்கை அரசு, அகதிகள் குறித்த அனைத்துலக சட்டத்தை மதிக்காமல், பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களை எந்தவொரு விசாரணையும் இன்றி திருப்பி அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசின் இந்த செயல்பாட்டிற்கு ஐ.நா. அகதிகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அகதிகள் விவகாரத்துக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் எட்வர்ட்ஸ் கூறியிருப்பதாவது:-

“ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இதுவரை இலங்கை அரசு 88 பாகிஸ்தான் அகதிகளை எந்தவொரு விசாரணையும் இன்றி சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பியுள்ளது.

#TamilSchoolmychoice

அவ்வாறு அவர்கள் தங்கள் நாட்டிற்கு சென்றால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறியும், அவர்களை இலங்கையில் தங்க வைக்க மறுத்துள்ளது”.

“அகதிகளை அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே அவர்களின் இடங்களுக்கு அனுப்ப வேண்டுமே தவிர, வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புவது விதிகளை மீறும் செயலாகும்.

இதன்மூலம், இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை பகிரங்கமாக மீறியுள்ளது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.