கிவி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.
கிவி பழத்தில் உள்ள நார்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துவதால் நீரிழிவு நோய் குணமாகும். மேலும் கொழுப்பை குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சளி போன்றவற்றிலிருந்து கிவி பழம் பாதுகாக்கும்.
கிவி பழமானது குறைந்த அளவு கொழுப்புச் சத்துகளை கொண்டுள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்கள் கிவி பழத்தை சாப்பிடலாம். விட்டமின் ‘சி’ யை அதிக அளவில் கொண்டுள்ள கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலையை தடுத்து சீரான இயக்கத்திற்கு உதவி புரிகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.