Home உலகம் பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தை சுற்றி பார்த்த இந்திய மாணவர்கள்

பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தை சுற்றி பார்த்த இந்திய மாணவர்கள்

521
0
SHARE
Ad

falg-britainலண்டன், பிப். 21- பிரிட்டனில் படிக்கும் இந்திய மாணவர்கள், அந்நாட்டு பிரதமரின் அலுவலகத்தை, நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.

இது குறித்து, பிரிட்டிஷ் கவுன்சில் தகவல் தொடர்பு இயக்குனர் மார்க் ஹெர்பர்ட் கூறியதாவது:-

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அதே நேரத்தில், பிரிட்டனில் படிக்கும் இந்திய மாணவர்கள், 30 பேர், அவர் அலுவலகத்தை சுற்றி பார்த்தனர்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சிக்கு, பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்தது. உலகில் உள்ள தலை சிறந்த, 200 பல்கலைக் கழகங்களில், 31 பல்கலைக் கழகங்கள், பிரிட்டனில் தான் உள்ளன. இந்த பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம், பிரகாசமாக உள்ளது.

பிரிட்டன் பல்கலைக் கழகங்களில், முதுகலை படிப்பு படிக்க காத்திருக்கும், இந்திய மாணவர்கள், 30 பேர், லண்டன், டவுனிங் சாலையில் உள்ள, பிரிட்டன் பிரதமரின் அலுவலகத்தை சுற்றி பார்த்தனர் என்று மார்க் ஹெர்பர்ட் கூறினார்.