Home இந்தியா இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை – ராஜபக்சே!

இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை – ராஜபக்சே!

628
0
SHARE
Ad

rajapukshaசென்னை, ஆகஸ்ட் 14 – இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் போக்கு நீடித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வங்க கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

மீனவர்களின் வலைகளை அறுப்பது, மீன்களை பறிப்பது, அடித்து துன்புறுத்துவது என இலங்கை கடற்படையினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண, இலங்கை – தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த மே மாதம், புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். அவரது அழைப்பை ஏற்று, அவரது பதவி ஏற்பு நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார்.

அப்போது, நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவிட்டார். அதையடுத்து, இனிமேல், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று கருதப்பட்டது.

ஆனால், அடுத்தடுத்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதங்களை எழுதினார்.

rajapakshaஇப்பிரச்சனையால் வேதனையடைந்த தமிழக மீனவர்கள், தங்கள் படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி, இலங்கை கடற்படையிடம் சரண் அடையவும் முன்வந்தனர். பா.ஜனதா மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, இலங்கை சிறைகளில் 93 தமிழக மீனவர்கள் உள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட 93 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று உத்தரவிட்டார். இந்திய சுதந்திர தினம் நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில், ராஜபக்சே பெயரில் உள்ள கணக்கில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக மீனவர்களுடன் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. அந்த படகுகள் விடுவிக்கப்படுமா? என்பது பற்றி இந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை.

இதனால், மீனவர்களுக்கு அவர்களின் படகுகள் திரும்பக் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த மே மாதம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு இதுவரை 225 மீனவர்களை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.