Home வாழ் நலம் சர்க்கரை நோயை குணப்படுத்தும் செம்பருத்தி பூ!

சர்க்கரை நோயை குணப்படுத்தும் செம்பருத்தி பூ!

1792
0
SHARE
Ad

Barcelona1008-20ஆகஸ்ட் 15 – செம்பருத்தியில் ஸ்டெர்குலிக் அமிலம், மால்வாலிக் அமிலம், சயனின், சயனிடின், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், நியசின் கரோட்டின், அஸ்கோர்பிக் அமிலம், தயமின் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

இதன் பூக்களில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிடலாம். சர்க்கரை வியாதிக்கும் சிறந்த மருந்து. சிறுநீர் பிரச்சனைகளை குணப்படுத்தும்,.

Hibiscus_Brilliantஉடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும்,  இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ சிறப்பாக உதவுகிறது. காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு பூ எடுத்து நீரில் போட்டு தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும்.

#TamilSchoolmychoice

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும்.

Hibiscus-rosa-sinensisஇந்தப் பூவினை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் வாத நோய் குணமாகும்.

இரவு படுக்கும் போது செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள், தவிர, பொடுகு, சுண்டுகளும் நீங்கிவிடும்.

hibiscusசில குழந்தைகள் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.