Home உலகம் உக்ரைனின் கிரிமீயா நமதல்ல – ரஷ்யப் பிரதமரின் டுவிட்டர் பக்கத்தால் பரபரப்பு!

உக்ரைனின் கிரிமீயா நமதல்ல – ரஷ்யப் பிரதமரின் டுவிட்டர் பக்கத்தால் பரபரப்பு!

550
0
SHARE
Ad

russianமாஸ்கோ, ஆகஸ்ட் 15 – ரஷ்யப் பிரதமர் பதவி விலகுவதாக ‘டுவிட்டர்’ (Twitter) சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ்வின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று “ரஷ்ய அரசின் நடவடிக்கைகள் என்னை வெட்கம் அடையச் செய்கின்றன. உக்ரைனின் கிரிமீயா பகுதி நமக்குச் சொந்தமானதல்ல. இது போன்ற நடவடிக்கைகளால் நான் பதவி விலகுகின்றேன்” என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக ரஷ்யாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அவரின் டுவிட்டர் கணக்கை விஷமிகள் ஊடுருவி கைவரிசை காட்டி உள்ளதாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து ரஷ்ய அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “பிரதமரின் டுவிட்டர் பக்கம் தகவல் திருடர்களால்  ஊடுருவப்பட்டுள்ளது.

russian_pmஅதில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் பரபரப்பபை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்பட்டவை. அவை உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை” என்று தெரிவித்த்துள்ளார்.

எனினும், உக்ரைன் குறித்து பிரதமரின் வலைப்பதிவில் இருந்து வெளியான கருத்துக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பதிவினால் நேற்று ஒரே நாளில் அவரது டுவிட்டர் பதிவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியது.