Home நாடு வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” – நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் 10,000 அமெரிக்க டாலர் பரிசு...

வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” – நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் 10,000 அமெரிக்க டாலர் பரிசு பெற்றது

1143
0
SHARE
Ad

vairamuthuகோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “மூன்றாம் உலகப் போர்” என்ற நூலுக்கு, மலேசிய கூட்டுறவு சங்கமான தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசு வழங்கப்பட உள்ளது.

உலகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக கருதப்படும் புவி வெப்பத்தைப் பற்றியும் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் “மூன்றாம் உலகப் போர்” நாவலில் கவிபேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். அந்த நூலுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்.

இந்த பரிசு விவரங்கள் குறித்து தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ சகாதேவன் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“கவிபேரரசு வைரமுத்து எழுதிய “மூன்றாம் உலகப் போர்” என்ற நூலுக்கு  பத்தாயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்குவதில் டான்ஸ்ரீ கே.ஆர் சோமா அறவாரியம் பெருமையடைகிறது.”

“அந்த போட்டிக்கு இந்தியாவிலிருந்து மட்டும் 142 நாவல்களும், மலேசியாவிலிருந்து 24, இலங்கையிலிருந்து 19, சிங்கப்பூரிலிருந்து 10, இங்கிலாந்து,அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தலா 2, ஆஸ்திரேலியா – கனடாவிலிருந்து தலா 1 – என நாவல்கள் போட்டிக்கு கிடைக்கப்பெற்றன” என்று தெரிவித்தார்.

உள்நாட்டின் நூலுக்கும் பரிசு: 

புண்ணியவான்கோ.

இதற்கிடையில், உள்நாட்டு நூல்களில் சிறந்ததாக, சுங்கைப்பட்டாணி கோ.புண்ணியவான் எழுதிய “செலாஞ்சார் அம்பாட்” என்ற நூல் 10,000 மலேசிய ரிங்கிட்டைப் பரிசாகப் பெற்றது.

தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் புத்தகப் பரிசளிப்பு விழா வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெறும் என்றும் சகாதேவன் தெரிவித்தார். இந்தப் போட்டிகளை கூட்டுறவு சங்கம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வருகின்றது.