Home உலகம் ஈராக்கின் புதிய பிரதமருக்கு மாலிகி திடீர் ஆதரவு!

ஈராக்கின் புதிய பிரதமருக்கு மாலிகி திடீர் ஆதரவு!

677
0
SHARE
Ad

haider al abidiபாக்தாத், ஆகஸ்ட் 16 – ஈராக்கில் தொடர்கதையாகிப் போன தீவிரவாதத்திற்கும், அரசியல் குழப்பங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் தருணம் நெருங்குவதாக தெரிய வருகின்றது.

துணை சபாநாயகர் ஹைதர் அல் அபடி நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த முன்னாள் பிரதமர் நூரி அல் மாலிகி தனது நிலைப்பாட்ட மாற்றிக் கொண்டுள்ளார்.

கடந்த 2006-2007-ம் ஆண்டு இராணுவத்தைக் கொண்டு ஈராக் இனக்கலவரத்தை அடக்கிய அமெரிக்க அரசு, நூரி அல் மாலிகியை பிரதமராக்கி நிலைமையை சீற்படுத்தியது. எனினும், மக்களை ஒருங்கிணைத்துச் செல்ல அவர் தவறியதால் அங்கு மீண்டும் இனக் கலவரம் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதநாள் கடந்த ஏப்ரலில் அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றும் மாலிகியை பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யாமல் அந்நாட்டின் துணை சபாநாயகரான ஹைதர் அல் அபடியை பிரதமராக ஈராக் அதிபர் தேர்வு செய்தார்.

haider-al-abadiஇதனை கடுமையாக எதிர்த்து வந்த மாலிகி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகரித்து வந்த கடும் அழுத்தங்கள் காரணமாக நேற்று முன்தினம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். மேலும் அவர் தொலைக்காட்சி ஒன்றில் மூலமாக ஹைதர் அல் அபடிக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஷியா பிரிவின் மிதவாதியாக அறியப்படும் அபடி ஈராக்கின் ஷன்னி ஜிஹாதி போராளிகளை அமைதிப்படுத்தி ஒருங்கிணைத்துச் செல்லக் கூடியவராக உலக நாடுகள் கருதுகின்றன.

இந்த முடிவு அமெரிக்கா மகிழ்ச்சி தருபவையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஈராக்கில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மீண்டும் ஒரு புதிய அரசு அமைந்துள்ளதாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகின்றது.