Home கலை உலகம் ‘திருட்டு விசிடி’ படத்தின் மூலம் இயக்குநராகிறார் ‘காதல்’ சுகுமார்!

‘திருட்டு விசிடி’ படத்தின் மூலம் இயக்குநராகிறார் ‘காதல்’ சுகுமார்!

1069
0
SHARE
Ad

விசிடிதிருட்டுகோலாலம்பூர், ஆகஸ்ட் 16 – தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் ‘காதல்’ திரைப்படத்தில் பரத்தின் நண்பராக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ‘காதல்’ சுகுமார் தற்போது ‘திருட்டு விசிடி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகிறார்.

இது குறித்து சன் டிவி, ‘அசத்தப்போவது யார்’ புகழ் நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகம், தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“காதல் படத்தில் ஒரு காமெடியனாக இயல்பாக அறிமுகமாகி நம் மனதில் ஒட்டிக்கொண்டவர் ‘காதல்’சுகுமார். அப்படத்திலும் உணர்ச்சிகரமான காட்சிகளில் பிரமாதமான உடல் மொழியுடன் நடித்திருப்பார்.அந்த ஒரு சோறு பதத்தை ஃபாஸ்ட் ஃபுட் -க்கு மாறிய தமிழர்கள் மறந்திருக்கலாம்.”

#TamilSchoolmychoice

“கலைஞானி கமலுடன் விருமாண்டி வசூல்ராஜா ஆகிய படங்களில் நடித்த போது இவரது திறமையை கண்டு வியந்த கமல், நீ நடிகன் மட்டுமல்ல சிறந்த டெக்னீஷுயனும் கூட ஆகவே சீக்கிரம் படம் இயக்கப்பார் என்று அறிவுறித்தியுள்ளார்.”

venkatesh arumugam

(நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகம்)

“கலைஞானி அவர்கள் சொன்னபடி லண்டன் சென்று இயக்கம் பற்றி பயின்று திரும்பிய பின்பு தனது சிந்தனையில் பிறந்த கதை ஒன்றுக்கு உயிர் தந்து இன்று திருட்டு விசிடி என்ற படத்தை இயக்கி வெளியிட இருக்கிறார்.”

“இந்த திரைப்படத்தின் பெயர், அதன் விளம்பரம், கேப்ஷன், மற்ற யோசனைகள் எல்லாமே மிக வித்தியாசமாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.இதே போல் படமும் இருக்கும் என நம்புகிறேன்.”

“தமிழ் சினிமாவில் நல்ல கதையை நம்பும் ஆரோக்கிய சூழலில் நண்பர் சுகுமாரின் இம்முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்கது.வியாபார ரீதியாகவும் இப்படம் வெற்றிப்படமாக அமைய முகநூல் நண்பர்கள் சார்பில் மனதார வாழ்த்துகிறேன்.” என்று வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

பப்பட் ஷோ கிரியேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் சந்திரன், மோஹன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜெகதீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜித்தின் ரோஷன் இசை அமைக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தில் ‘காதல்’ சுகுமார் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு – ஃபீனிக்ஸ்தாசன்