Home Featured கலையுலகம் காதல் சுகுமாரின் ‘சும்மாவே ஆடுவோம்’ – ஜூலை 8-ம் தேதி வெளியாகிறது!

காதல் சுகுமாரின் ‘சும்மாவே ஆடுவோம்’ – ஜூலை 8-ம் தேதி வெளியாகிறது!

723
0
SHARE
Ad

சென்னை – நடிகர் காதல் சுகுமார் இயக்கத்தில், கூத்துக் கலையையும், ஆணவப் படுகொலையையும் மையமாகக் கொண்ட திரைப்படமான ‘சும்மாவே ஆடுவோம்’ வரும் ஜூலை 8-ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SMA

முதல் முறையாக 45 நகைச்சுவைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ள இத்திரைப்படத்தில், அனைத்துலக  நீச்சல் வீரர் அருண் பாலாஜி, அர்ஜுன், லீமா, ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் முருகன் மந்திரம் 4 பாடல்களும், உதயா மற்றும் கவிஞர் அஸ்மின் ஒரு பாடலும் எழுதியுள்ளனர். தற்போது இணையத்தில் அப்பாடல்களைப் பதிவிறக்கம் செய்து கேட்கலாம்.

‘சும்மாவே ஆடுவோம்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தினை இங்கே காணலாம்:-