Home நாடு “சுல்தான் பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்கள்” – காலிட்டுக்கு லிம் கிட் சியாங் சவால்

“சுல்தான் பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்கள்” – காலிட்டுக்கு லிம் கிட் சியாங் சவால்

561
0
SHARE
Ad

Lim Kit Siang கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 – சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் இனியும் சுல்தான் பின்னால் ஒளிந்து கொண்டு தனது பதவியை நீடித்துக் கொள்ளும் முயற்சிகளைக் கைவிட்டு விட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங்,

தனக்குத்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது என ஏன் சுல்தானிடம் காலிட் பொய் கூறினார் என்பதற்கு முறையான விளக்கத்தை அவர் தர வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.

“உண்மையான, நேர்மையான, கடப்பாடு கொண்ட ஓர் அரசியல் தலைவராக அவர் வெளியில் முன் வர வேண்டும். இனியும் சுல்தான் பின்னால் அவர் ஒளிந்து கொள்ளக் கூடாது. ஏன் பொய் கூறினீர்கள் என்று கேட்டால், வேண்டுமானால் சுல்தானுக்கு எழுதித் தெரிவியுங்கள் என்கின்றார். ஆனால், விளக்கம் தர வேண்டியது காலிட்தானே தவிர, சுல்தான் அல்ல” என்றும் கிட் சியாங் கூறினார்.

#TamilSchoolmychoice

தனது சொந்தக் கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட ஒருவர் எனக்குத்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது என எப்படி கூற முடியும் என்றும் கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.

சுல்தானிடம் தவறான தகவல்களைத் தந்திருக்கும் காலிட் மேலும் மோசமான மந்திரி பெசாராக சிலாங்கூர் மக்களுக்கு ஆட்சியைத் தருவார் என்றும் கிட் சியாங் சாடியுள்ளார்.

“பாஸ் கட்சியின் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலிட்டுக்கு ஆதரவு தருவதாக வைத்துக் கொண்டாலும், ஜசெகவின் 15 உறுப்பினர்களும், பிகேஆர் கட்சியின் 13 உறுப்பினர்களும் அவருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர் என்ற உண்மையை சுல்தானுக்கு மந்திரி பெசார் எடுத்துக் கூறியிருக்க வேண்டும். பெரும்பான்மை தனக்குத்தான் என்று கூறக் கூடாது” என்றும் தான் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்

“பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உடனேயே காலிட் கௌரவமாக மந்திரி பெசார் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்க வேண்டும் ஆனால் அதை விடுத்து சட்டமன்றத்தைக் கலைப்பதைப் பற்றி அவர் பேசுகின்றார். 13வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மக்கள் அளித்துவிட்ட மாபெரும் வெற்றியை ஆதரவை காலிட் கொச்சைப்படுத்தவோ, கேவலப்படுத்தவோ கூடாது” என்றும் கிட் சியாங் சாடியுள்ளார்.