Home இந்தியா யோகாசன குரு பி.கே.எஸ்.அய்யங்கார் காலமானார்!

யோகாசன குரு பி.கே.எஸ்.அய்யங்கார் காலமானார்!

534
0
SHARE
Ad

scan0001புனே, ஆகஸ்ட் 20 – பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்த பி.கே.எஸ்.அய்யங்கார் (96) புனேவில் இன்று அதிகாலை காலமானார்.

யோகக் கலை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து, அவற்றை நூல்களாக எழுதி வெளியிட்டுள்ள பி.கே.எஸ்.அய்யங்காருக்கு உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான சீடர்கள் உள்ளனர்.

இந்த துறையில் சிறப்பாக தொண்டாற்றியமைக்காக மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை பெற்ற இவர். தனது குடும்பத்தாருடன் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் வாழ்ந்து வந்தார்.

#TamilSchoolmychoice

gurujiநல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்த இவர், சில மாதங்களாக இதயம் சார்ந்த கோளாறுகளுக்கு உள்ளானார். கடந்த 12-ம் தேதி சுவாசக் கோளாறு, மற்றும் சிறுநீரக பாதிப்புக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பி.கே.எஸ்.அய்யங்கார், இன்று அதிகாலை 3.15 மணிக்கு காலமானார்.