Home நாடு ஆஸ்ட்ரோவின் ‘ஏபிஓ பாலிஒன் எச்டி’ அலைவரிசை – இந்தி நடிகை கஜோல் அறிமுகம் செய்தார்!

ஆஸ்ட்ரோவின் ‘ஏபிஓ பாலிஒன் எச்டி’ அலைவரிசை – இந்தி நடிகை கஜோல் அறிமுகம் செய்தார்!

1072
0
SHARE
Ad

astroகோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – மலேசியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோவின் ‘ஏபிஓ பாலிஒன் எச்டி’ அலைவரிசையின் அறிமுக விழா இன்று மாலை 7 மணியளவில் தலைநகர் புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஜெடபிள்யூ மேரியாட் தங்கும்விடுதியில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரபல இந்தி நடிகை கஜோல் கலந்து கொண்டு ‘ஏபிஓ பாலிவுட் எச்டி’ அலைவரிசையை அறிமுகம் செய்தார். கருப்பு வெள்ளை நிறத்திலான சேலை உடுத்தியிருந்த காஜோல் 40 வயதிலும் மிக இளமையாக இருக்கிறார்.

இந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தனது படங்களான ‘குச் குச் ஹோத்தா ஹை’ மற்றும் ‘கபி குஷி கபி கம்’ போன்ற படங்கள் குறித்து தனது இனிமையான நினைவுகளை இந்த விழாவில் கஜோல் பகிர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் மலாய்காரர்கள் உட்பட பல இனத்தவர்களும் இந்தியில் வெளிவரும் திரைப்படங்களை விரும்பி பார்க்கின்றனர். அவர்களை மகிழ்ச்சி படுத்தும் நோக்கில் ஆஸ்ட்ரோ நிறுவனம் இந்த பாலிஒன் எச்டி அலைவரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வரும் செப்டம்பர் 1 -ம் தேதி முதல் ஆஸ்ட்ரோ சேனல் 251 -ல் புதிய இந்தி திரைப்படங்களை மிகத் துல்லியமான தரத்தில் மலேசிய இரசிகர்கள் பார்த்து மகிழலாம்.