Home இந்தியா இந்திய அரசின் நிர்வாகம் மக்கள் கையில் இருக்க வேண்டும் – மோடி

இந்திய அரசின் நிர்வாகம் மக்கள் கையில் இருக்க வேண்டும் – மோடி

480
0
SHARE
Ad

narendra-modiராஞ்சி, ஆகஸ்ட் 22 – ‘‘இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு செல்ல, அனைத்து மாநிலங்களிலும் சரி சமமான வளர்ச்சி ஏற்பட வேண்டும்’’ என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் மின் திட்டம் உட்பட பல்வேறு நல திட்டங்களை ராஞ்சியில் நேற்று தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, “குஜராத்தை விட பல மடங்கு முன்னேற்றம் அடைவதற்கான வளம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது.

ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் தெளிவான தீர்ப்பு அளிக்காததால், எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை. மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் நீங்கள் ஆட்சியை தேர்ந்தெடுத்ததால், தே.ஜ. கூட்டணி அரசு விரைவாக முடிவுகளை எடுக்க முடிகிறது.

#TamilSchoolmychoice

கூட்டணி அரசாக இருந்திருந்தால், நிர்ப்பந்தம் காரணமாக பல தடைகள் ஏற்பட்டிருக்கும். எனவே, வரும் சட்டப் பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்கும் விதத்தில் புதிய ஆட்சியை தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் ஜார்கண்ட் மாநிலம் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

இந்தியாவின் மேற்கு பகுதியில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கிழக்கு பகுதியில் முன்னேற்றத்துக்காக மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.

modi-pagdiஇந்த 765 கிலோ வாட் ராஞ்சிசிபத் மின்திட்டம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். நாட்டின் எந்த பகுதியும் பலவீனமாக இருக்கக் கூடாது.

எல்லா மாநிலங்களும் சரி சமமான வளர்ச்சியை பெற்றால்தான், இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும்.காலம் மாறிவிட்டது. நாம் டிஜிட்டல் இந்தியாவுக்குள் நுழைய வேண்டும். அரசு நிர்வாகம் மக்கள் உள்ளங்கையில் இருக்க வேண்டும் என மோடி பேசினார்.