Home இந்தியா ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்!

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்!

421
0
SHARE
Ad

air-indiaஅகமதாபாத், ஆகஸ்ட் 23 – டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.

அந்த விமானத்தில் 104 பயணிகள் இருந்தனர்.  விமானம் பிரச்சினையின்றி தரையிறங்கியது. ஏர்பஸ் 321 ரக விமானமான காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பியது.

வழியில் என்ஜின்களில் ஒன்றில் பிரச்சனை ஏற்பட்டதால் ஜெய்ப்பூரில் 7.25 மணிக்கு அது தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து ஜெய்ப்பூர் விமான நிலைய ஏர் இந்தியா மேலாளர் அனில் கூறுகையில்,

#TamilSchoolmychoice

airindia“என்ஜின்களில் ஒன்றில் பிரச்சனை ஏற்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் வேறு விமானத்தில் பயணிகள் அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்டனர் என கூறினார்.