Home உலகம் செப்டம்பர் 2-ம் தேதி ஆப்கனில் புதிய அதிபர் பதவி ஏற்பார் என அறிவிப்பு!

செப்டம்பர் 2-ம் தேதி ஆப்கனில் புதிய அதிபர் பதவி ஏற்பார் என அறிவிப்பு!

526
0
SHARE
Ad

afganகாபூல், ஆகஸ்ட் 25 – ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் எதிர் வரும் செப்டம்பர் 2-ம் தேதி பதவியேற்பார் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் ஆட்சியில் இருந்து அமெரிக்காவின் உதவியுடன் மீண்ட ஆப்கானிஸ்தான், நிலையான ஜனநாயக ஆட்சியை அமைய கடுமையாக போராடி வருகின்றது.

அந்நாட்டின் புதிய அதிபர் இம்மாதம் 2-ம் தேதியே பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால், அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்றின் இறுதியில் பெரும்பான்மை வாக்குகள் யாருக்கும் கிடைக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது சுற்று வாக்குப் பதிவில், முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதன் காரணமாக அங்கு இதுவரை யாரும் புதிய அதிபராக பதவி ஏற்க முடியவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அடுத்தமாதம் 2-தேதி புதிய அதிபர் பதவியேற்பார் என தற்போதைய அதிபர் கர்ஸாய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

afghan-presidential-candida“அடுத்தமாதம் 2-ஆம் தேதி புதிய அதிபரின் பதவியேற்பு விழா நடைபெறும். இதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. புதிய அரசினை ஏற்க ஆப்கன் தயாராகி வருகின்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் அதிபர் தேர்தலில் தலிபான்களுக்கு எதிராகப் போராடிய அப்துல்லா அப்துல்லா மற்றும் உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் அஷ்ரப் கானி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் சுமார் 80 லட்சம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பொழுது அஷ்ரப் கானி முன்னிலை பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை ஏற்காத அப்துல்லா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுப்பினார். தற்போது பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டதால் விரவில் அங்கு ஜனநாயகம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.