Home இந்தியா பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்: இந்திய எல்லையில் சண்டை தீவிரம்!

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்: இந்திய எல்லையில் சண்டை தீவிரம்!

681
0
SHARE
Ad

Indiaஆர்.எஸ்.புரா, ஆகஸ்ட் 25 –  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலை நடந்த சண்டையில், 35 இந்திய பிஎஸ்எப் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் அளித்து வருகிறது.  பாகிஸ்தான் படைகள் கூடாரம் அமைத்து கனரக இயந்திர துப்பாக்கிகளை கொண்டு ராம்கார்க், அர்ணியா, ஆர்.எஸ்.புரா பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய தாக்குதல் காலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

#TamilSchoolmychoice

mmm710மேலும் பாஜக அரசு பொறுப்பேற்ற மே மாதம் முதல் இதுவரை சுமார் 70 முறை பாகிஸ்தான் படைகள் அத்துமீறு தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.