இலங்கை, ஆகஸ்ட் 25 – இலங்கைஅதிபர் மகிந்த ராஜபக்சே திடீர் உடல்நலக் குறைவால் அவசரமாக வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் இது குறித்த தகவல்களை வழங்க அரசாங்கத் தரப்பினர் மறுத்து வருகின்றனர். நேற்றைய தினம் அதிபர் மாளிகையில் இருந்து வானூர்தி ஒன்றில் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேச விமானம் ஒன்றின் மூலம் வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய் ஏற்பட்டிருப்பதாகவும் அதிபர் மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அமெரிக்காவுக்கே அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த விசயத்தை அரசாங்கம் மிகவும் இரகசியமாக வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.