Home நாடு பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: வெள்ளிக்கிழமை தேர்தல் நாள் அறிவிக்கப்படலாம்!

பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: வெள்ளிக்கிழமை தேர்தல் நாள் அறிவிக்கப்படலாம்!

567
0
SHARE
Ad

Datuk Noor Zahidiபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 25 – பெங்காலான் குபோர் இடைத்தேர்தல் குறித்து வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அப்துல் கானி சாலே கூறுகையில், “இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணைய கூட்டத்தில் கலந்தாலோசித்த பிறகு வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் நாள் மற்றும் தேர்தல் நடைபெறும் தேதி ஆகியவை அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 -ம் தேதி பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஓமார் (படம்) புற்று நோய் காரணமாக காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 13 வது பொதுத்தேர்தலில், நூர் சாஹிடி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் சஹாருன் இப்ராகிம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் இஸாட் புஹாரி இஸ்மாயில் புஹாரி ஆகியோரை 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.