Home நாடு மந்திரி பெசார் விவகாரம்: காலிட் நாளை சுல்தானை சந்திப்பது உறுதி!

மந்திரி பெசார் விவகாரம்: காலிட் நாளை சுல்தானை சந்திப்பது உறுதி!

531
0
SHARE
Ad

kalid-ibrahimஷா ஆலம் , ஆகஸ்ட் 25 – சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் அடுத்து என்ன முடிவெடுப்பது என்று கலந்தாலோசிப்பதற்காக டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் நாளை சிலாங்கூர் சுல்தானை சந்திக்கவுள்ளார்.

அரசாங்க அதிகாரிகளுடனான மாதாந்திர கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட காலிட், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாளை மதியம் 2.30 மணியளவில் சுல்தானை சந்திக்கவுள்ளேன். அதன் பின்னர் 4 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு இருக்கும்” என்று தெரிவித்தார்.

பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு எதிராக செயல்பட்டதற்காக, காலிட் இப்ராகிம் கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

காலிட் இப்ராகிமுக்கு ஆதரவு வழங்கி வந்த பாஸ் கட்சியும் திடீரென தங்களது ஆதரவை மீட்டுக் கொண்டு, புதிய மந்திரி பெசார் பதவிக்கு வான் அசிசாவையும், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியையும் முன்மொழிந்தது.

இதனிடையே, சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், தான் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் வெளிநாடு சென்றிருந்த சுல்தான் காலிட்டுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 27 -ம் தேதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்ப வேண்டிய சுல்தான், தனது பயணத்தை சுருக்கிக் கொண்டு கடந்த ஆகஸ்ட் 23 (சனிக்கிழமை) -ம் தேதி நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.