Home அவசியம் படிக்க வேண்டியவை ஈப்போ அரை நிர்வாண படப்பிடிப்பு: இரு மாடல்களுக்கும் தலா 400 ரிங்கிட் அபராதம்!

ஈப்போ அரை நிர்வாண படப்பிடிப்பு: இரு மாடல்களுக்கும் தலா 400 ரிங்கிட் அபராதம்!

604
0
SHARE
Ad

Ipoh 2ஈப்போ, ஆகஸ்ட் 27 – ஈப்போவில் பொது இடத்தில் நடத்தப்பட்ட படப்பிடிப்பில் அரை நிர்வாணமாக காட்சி கொடுத்த இரண்டு மாடல்களுக்கு (Freelance Models) நீதிமன்றத்தில் இன்று தலா 400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 25 -ம் தேதி, ஈப்போவிலுள்ள ஜாலான் சுல்தான் யூசோப் சாலையில், லோ கா வேய் (வயது 27), ஹௌ ஜோ யி (வயது 21) ஆகிய இருவரும் இந்த குற்றத்தைப் புரிந்ததாக நீதிபதி ஹஸ்லிண்டா ஏ ராவோப் தீர்ப்பளித்தார்.

இவர்கள் இருவர் மீதும் குற்றப்பிரிவு 268 , 290 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் தங்களது அபராதத் தொகையை செலுத்தி, தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்டனர்.

ஈப்போவைச் சேர்ந்த ஒரு திருமணப் படங்கள் எடுக்கும் நிறுவனம், இவர்கள் இருவரையும் திருமண தம்பதிகள் போல் புகைப்பட எடுக்க திட்டமிட்டது.

ஆனால் சற்று வித்தியாசமாக இருக்க, இவர்கள் இருவரையும் அரை நிர்வாண ஆடைகளுடன் அலங்காரம் செய்து பொது இடத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்தியது.

இந்த காட்சியை அந்த வழியே போவோர் வருவோரெல்லாம் பார்த்து முகம் சுழித்ததோடு, அதை தங்களது திறன்பேசிகளில் புகைப்படமும் எடுத்து இணையத்தில் பரவ விட்டனர்.

அதனைத் தொடர்ந்து, காவல்துறை அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.