Home கலை உலகம் உள்ளாடையுடன் ‘ஐஸ்’ குளியல் போட்ட பூனம் பாண்டே! (காணொளி உள்ளே)

உள்ளாடையுடன் ‘ஐஸ்’ குளியல் போட்ட பூனம் பாண்டே! (காணொளி உள்ளே)

813
0
SHARE
Ad

poonam-pandeyமும்பை, ஆகஸ்ட் 27 – நடிகை பூனம் பாண்டே ஐஸ் குளியல் (ஐஸ் பக்கெட்) சவாலை ஏற்றுக் கொண்டு பாலிவுட்டின் ஸ்டார்களான சல்மான் கான், ஷாருக் கான், அமிர் கான்களை சவாலை ஏற்குமாறு கூறியுள்ளார்.

ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ‘ஐஸ் குளியல்’ சவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சவாலை உலக தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், பொது மக்கள் ஏற்று அதை காணொளியாக எடுத்து வெளியிட்டு வருவதுடன், ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடையும் அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த சவாலை நடிகையும், மாடலுமான பூனம் பாண்டேவும் ஏற்றுள்ளார். ஏராளமான ரசிகர்கள் தன்னை ஐஸ் குளியல் சவாலை ஏற்றுக் கொள்ளுமாறு கூறியதாக பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

விளம்பரம் தேட வாய்ப்பு தேடியவருக்கு ரசிகர்களாக பார்த்து அளித்த வாய்ப்பை விட்டுவிடுவாரா என்ன? பூனம் பாண்டேயின் ‘ஐஸ் குளியல்’ காணொளியை அவர் குளியல் அறையில் இரவு ஆடையில் இருக்கையில் துவங்கினார்.

poonam-pandey,

‘ஐஸ் கட்டிகள்’ நிரப்பி வைக்கப்பட்ட வாளியை எடுத்து அதை தலையில் கவிழ்த்தினார். சவாலை ஏற்ற பூனம் பாண்டே சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் அமீர் கான் இந்த ஐஸ் குளியல் சவாலை ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.