அதன் தொடர்ச்சியாக நஸ்ரியா கணவரும், நடிகருமான பஹத் பாசில் ஒரு சவால் விடுத்திருக்கிறார். அதற்கு ‘மை டிரி (My tree) சவால்’ என பெயரிட்டிருக்கிறார்.
அதாவது தான் சொல்லும் சிறப்பு விருந்தினர் குறிப்பிட்ட அளவு மரங்களை நட வேண்டும் என்பதுதான் இந்த சவால். மம்முட்டி, மோகன்லாலுக்கு இந்த சவாலை பஹத் பாசில் விடுத்தார்.
அதை உடனடியாக மம்முட்டி ஏற்றுக் கொண்டதுடன் மரத்தை நட்டு அதற்கான புகைப்படத்தை இணைய தளத்திலும் வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி மம்முட்டி கூறும்போது,
இயற்கையை பாதுகாக்கவும், வருங்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டும் இந்த வேலையை செய்ய வேண்டும். ஷாருக்கான், விஜய், சூர்யாவுக்கு இந்த சவாலை நான் விடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் மம்முட்டி.