Home இந்தியா காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் பேருந்து அடித்து சென்றதில் 70 பேர் பலியா?

காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் பேருந்து அடித்து சென்றதில் 70 பேர் பலியா?

560
0
SHARE
Ad

An Indian Army handout photograph shows Indian army soldiers try to rescue the passengers of marriage party bus who were washed away in flash floods in Rajouri district of Jammu.ஸ்ரீநகர், செப்டம்பர் 5 – ஜம்மு காஷ்மீரில், ரஜோரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்த 70 பயணிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

70 பேரும் பலியாகியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Floods in Indian Kashmirகடந்த சில தினங்களாக காஷ்மீரில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் கன மழைக்கு 14 பேர் பலியாகியுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஜீலம் நதி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருமண விழாவிற்காக சுமார் 70 பேரை ஏற்றி சென்ற பேருந்து ரஜோரி மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

An Indian Army handout photograph shows Indian army soldiers try to rescue the passengers of marriage party bus who were washed away in flash floods in Rajouri district of Jammu.ஆற்றில் வெள்ளம் சீறிப் பாய்வதால் 70 பேரின் நிலை என்னவென்பது இதுவரை தெரியவில்லை. சம்பவ பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், வெள்ளப் பெருக்கு அதிகமாக இருப்பதால் மீட்புக் குழுவினர் களத்தில் இறங்கி செயல்படுவதில் பெரும் சிக்கல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

Floods in Indian Kashmirமுன்னதாக, மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பேரிடரை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு முதல்வர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.