Home இந்தியா கருணாநிதியின் முகநூல் பக்கத்தை 2 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்!

கருணாநிதியின் முகநூல் பக்கத்தை 2 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்!

532
0
SHARE
Ad

karunanithiசென்னை, ஆகஸ்ட் 28 – திமுக தலைவர் கருணாநிதியின் முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்தை 2 லட்சம் வாசகர்கள் பின்தொடர்கின்றனர். இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

“முகநூல் என்ற சமூக வலைதளம் உலகத்தில் உள்ள அனைத்து முனைகளையும் இணைக்கும் மாபெரும் சமூக சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் முகநூல் நிறுவனம், உலகில் உள்ள தலைசிறந்த பிரமுகர்களின் பக்கங்களை அங்கீகரித்து வருகிறது.

karunanithiஅந்த வகையில் தலைசிறந்த இந்தியப் பிரமுகர்களின் பட்டியலில் கருணாநிதியின் பிரத்யேக முகநூல் பக்கத்தை அங்கீகரித்துள்ளது. கருணாநிதியின் முகநூல் பக்கத்தை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கருணாநிதியின் இணையதள செயல்பாட்டை விரிவாக்கம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.