Home நாடு பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: பிகேஆர் போட்டியிட முடிவு!

பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: பிகேஆர் போட்டியிட முடிவு!

471
0
SHARE
Ad

Saifuddin-Nasution-7பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 3 – கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களிலும் பெங்காலான் குபோர் தொகுதியில் தேசிய முன்னணிக்கு எதிராகப் போட்டியிட்டு பிகேஆர் தோல்வியுற்ற காரணத்தால், எதிர்வரும் அத்தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணிக் கட்சியான பாஸ் போட்டியிடும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.

ஆனால் பிகேஆர் பொதுச்செயலாளர் டத்தோ சைபுடின் நாசுசன் இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் பிகேஆர் கட்சி தான் போட்டியிட வேண்டும் என்று கட்சியின் தலைமைக்கு கிளந்தான் பிகேஆர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும், பிகேஆர் போட்டியிடுவது குறித்து பாஸ் கட்சியுடன் கலந்தாலோசித்த பின்பு தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சைபுடின் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆகஸ்ட் 20 -ம் தேதி பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஓமார் புற்று நோய் காரணமாக காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வரும் செப்டம்பர் 25 -ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.