Home கலை உலகம் பிரபல ராப் பாடகர் ராபிட் மேக்கின் முதல் மலாய் தனிப்பாடல்!

பிரபல ராப் பாடகர் ராபிட் மேக்கின் முதல் மலாய் தனிப்பாடல்!

698
0
SHARE
Ad

Sempoi

கோலாலம்பூர், செப்டம்பர் 4 – பிரபல ராப் பாடகரான ராபிட் மேக், தனது இசை உருவாக்கத்தில் முதல் மலாய் தனிப்பாடலை (Single) -ஐ விரைவில் வெளியிடவுள்ளார்.

“Sempoi” என்ற பெயரில் உருவாகப்பட்டுள்ள அந்த பாடலின் 44 வினாடிகள் முன்னோட்டக் காணொளி, அண்மையில் யூடியூப் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு, இதுவரை சுமார் 10,500 பேருக்கும் மேற்பட்டவர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இம்மாதம் 7-ம் தேதி முதல் இப்பாடலை ஐடியூன், ஸ்போர்டிஃபை, டீசர் போன்ற முக்கிய இசைத்தளங்களில் கேட்டு மகிழலாம் என்றும் ராபிட் மேக்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான ‘மைந்தன்’ திரைப்படத்தில் ராபிட் மேக், கதாநாயகன் சிகே குமரேசனின், நண்பர் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளியிடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பாடலின் முன்னோட்டத்தை கீழே காணலாம்:-