Home வணிகம்/தொழில் நுட்பம் விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் வளர்ச்சி மூன்று சதவீதமாக உயர்வு!

விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் வளர்ச்சி மூன்று சதவீதமாக உயர்வு!

785
0
SHARE
Ad

Aviation

கோலாலம்பூர், செப்டம்பர் 5 –  உலக அளவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவில் விமான போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் விமான போக்குவரத்து நிறுவனங்களின் வருவாய் 3 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் 5 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளன.”

#TamilSchoolmychoice

“விமான நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், உலக அளவில் இரண்டாம் காலாண்டில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றமே ஆகும்.”

“இந்த வளர்ச்சி மூன்றாம் காலாண்டிலும் எதிரொலித்தால் விமான நிறுவனங்களின் பங்குகள் தன்னிறைவைப் பெறும்” என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

மலேசியாவைப் பொறுத்தவரை நாட்டின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் இரு பெரும் விபத்துகளால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. மாஸ் நிறுவனத்தின் இந்த நிலை, ஏர் ஏசியா போன்ற நிறுவனங்களுக்கு சாதகமான வர்த்தக சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.