Home கலை உலகம் பாடலாசிரியராகவும் உருவெடுக்கிறார் ஹரீஸ் ராகவேந்திரா!

பாடலாசிரியராகவும் உருவெடுக்கிறார் ஹரீஸ் ராகவேந்திரா!

665
0
SHARE
Ad

Harish Ragavendhraசென்னை, செப்டம்பர் 8 – பிரபல பாடகர் ஹரீஸ் ராகவேந்திரா தமிழில் மிக அழகாக கவிதைகள் எழுதக்கூடியவர் என்பது அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். குறிப்பாக பேஸ்புக்கில் அவர் இடும் கருத்துகள் பலரும் பாராட்டும் வகையில் இருக்கும்.

இந்நிலையில், ஹரீஸ் ராகவேந்திரா விரைவில் வெளிவர இருக்கும் புதிய படம் ஒன்றில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இது அவர் பாடல் எழுதும் நான்காவது படமாகும்.

‘கல்யாண சமையல் சாதம்’ என்ற படம் தான் ஹரீஸ் ராகவேந்திரா பாடல் எழுதிய முதல் படமாகும்.அதன் பின்னர், ‘வானவில் வாழ்க்கை’ மற்றும் இன்னும் வெளிவராத புதிய படம் என  மொத்தம் 3 படங்களில் ஹரீஸ் ராகவேந்திரா பாடல் எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணிப் பாடகராக இருப்பதோடு, பாடல் வரிகள் எழுவதிலும் ஹரீஸ் ராகவேந்திரா தற்போது ஆர்வம் காட்டி வருகின்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து, அமரர் கவிஞர் வாலி ஆகிய இரு தலைச்சிறந்த பாடலாசிரியர்களின் பாடல் வரிகளைக் கண்டு வியந்து போய், தனக்கு பாடல் எழுதும் ஆர்வம் வந்ததாக ஹரீஸ் ராகவேந்திரா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

“எனக்கு பாடல் எழுதுவது மிகவும் பிடிக்கும். அதற்காக அந்த பாடலை நான் தான் பாட வேண்டும் என்று நினைப்பதில்லை. இன்றைய காலத்தில் எல்லாரும் எல்லா திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை முயற்சி செய்து பார்க்கலாம். தொடக்கத்தில் சில படங்களில் நடித்தேன். பின்னர் பாடகராக உருவானேன். இப்போது பாடல் எழுதுகிறேன். நாளை இன்னும் புதுமையான விசயங்களை செய்து பார்ப்பேன்” என்று அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஹரீஸ் ராகவேந்திரா தெரிவித்திருந்தார்.