படம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த முக்கியத் திரையரங்குகளில் முதல் நாள் வரை ‘சம்பந்தன்’ திரைப்படத்தின் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
எனினும், அப்படம் அறிவித்திருந்தபடி, பெரும்பாலான திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், இயக்குநர் எஸ்.டி.பாலா அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தனை வெளியிடாமல் திரையரங்குகள் ஏன் பின்வாங்கின என்பது குறித்து விரைவில் பொதுமக்களுக்கு அறிவிப்பதாகவும், தற்போது அதை பற்றி எதையும் கூற முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வரும் செப்டம்பர் 16 -ம் தேதி, செவ்வாய்கிழமை, மாலை 5.45 மணிக்கு, பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் திரையரங்கில் சிறப்பு காட்சி ஒன்றை வெளியிட ஏற்பாடு செய்திருப்பதாக எஸ்.டி.பாலா அறிவித்துள்ளார்.
இந்த சிறப்புக் காட்சியை சுமார் 200 பேர் கண்டு ரசிக்கலாம் என்றும், நன்கொடையாக தலா 10 ரிங்கிட் வசூலிக்கப்படும் என்றும் எஸ்.டி.பாலா தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
– ஃபீனிக்ஸ்தாசன்