Home வாழ் நலம் ‘எபோலா’ நோயிடம் இருந்து தப்பிக்க சில வழிகள்!

‘எபோலா’ நோயிடம் இருந்து தப்பிக்க சில வழிகள்!

510
0
SHARE
Ad

Ebolaசெப்டம்பர் 8 – மேற்கு ஆப்ரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்த எபோலோ நோய் மலேசியாவிலும் ஊடுருவியுள்ளது என்று சொல்கிறது அண்மையில் கிடைத்த ஒரு தகவல்.

எபோலோ போன்ற மரணத்தை ஏற்படுத்தும் கிருமிகளை (வைரஸ்களை) கவனிக்காமல் விட்டால் அது ஆரோக்கியமான மனிதர்களை தாக்கி ஈ.வி.டி (Ebola Virus Disease) எனப்படும் நோயை உண்டாக்கி விடும்.

எபோலா வைரஸ் காய்ச்சல் வந்து விட்டது என்று அறிவிக்கப்பட்ட உடனேயே அதைத் தவிர்க்க மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க செய்வது தான் தொற்று பரவாமல் தடுக்கும் வழியாகும்.

#TamilSchoolmychoice

இந்த கட்டுரையின் மூலம் எபோலாவைத் தடுக்கும் சில பாதுகாப்பு உங்களுக்கு வழங்குகிறோம்.

Ebola-storyபரவும் வழிமுறைகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் நடவடிக்கையாகும்.

குறிப்பாக, மேற்கு ஆப்பிரிக்க பகுதிகளுக்கு செல்பவர்களும், அங்கிருந்து வருபவர்களும் தான் இந்த தகவல்களை உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எபோலாவைத் தவிர்ப்பதற்கு அடிப்படை சுகாதாரத்தைப் பேண வேண்டியது அவசியமாகும். இந்த வைரஸ் உடலுக்குள் எப்படி நுழைகிறது என்பது இன்னமும் கண்டறியப் படாவிட்டாலும், தோலும், கண்களும் இந்த நோய் ஊடுருவும் வழிகளாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

எனினும், உணவு, நீராதாரம் வழிகளாகவும் இந்த நோய் ஊடுருவலாம். எனவே, சாப்பிடும் முன்னர் கைகளை கழுவுதல், வீடுகளை கிருமி நாசினி மூலம் கிருமி நீக்கம் செய்து வைத்தல் மற்றும் வாயை துணிகளின் மூலம் மூடிக் கொள்ளுதல் போன்ற எளிய செயல்கள் போதும் எபோலாவை வர விடாமல் தவிர்க்க முடியும்.

ebola-storyஅதுவும் உங்களுடைய சுற்றுப்புறத்தில் எபோலாவின் தாக்கம் இருக்கும் போது மேற்கண்ட சுகாதார செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

எபோலா வைரஸானது, பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், உயிரணு, எச்சில், வியர்வை, சிறுநீர் மலம் என அனைத்து விதமான உடல் திரவங்களின் மூலமாகவும் பரவக்கூடும்.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் ஆகியவர்களும் கூட பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்கள், ஊசிகள் தொடவும் மற்றும் முதலுதவி செய்யவும் கூடும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

திறந்த காயங்கள் மற்றும் வெட்டுகளின் மூலம் வைரஸ் உடலுக்குள் செல்ல ஒரு வாய்ப்பு உருவாகி விடுகிறது. எனவே, சிறிய அளவிலான வெட்டுக்காயங்கள் மற்றும் இரத்தம் சிந்தும் காயங்களை சிகிச்சையளித்த பின்னர் மூடி வைக்க வேண்டும்.

ebolaவைரஸை பரிமாற்றம் செய்வதற்கு நேரடித் தொடர்பு தான் எளிய வழியாகும். எனவே, நோய்வாய்ப்பட்டவர்களிடம் இருந்து ஆரோக்கியமான நபர்களை தனிமைப்படுத்தி வைப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தவிர்த்திட முடியும்.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்தவ அலுவலர்கள் ஆகிய அனைவரும், கையுறைகளையும், சிறப்பு முகமூடிகளையும் மற்றும் வைரஸிடமிருந்து பாதுகாக்கக் கூடிய உடலுறைகளையும் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மேலும், நோய் பாதிப்பு உள்ள மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வசித்து வரும் ஆரோக்கியமான சாதாரண நபர்களும் கூட கையுறைகள் மற்றும் முகமூடிகளை பயன்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும்.

Ebolaஎபோலா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளது என நம்பப்படுகிறது. வௌவால்களில் இருந்து தான் இந்த வைரஸ் உண்மையிலேயே பரவியது என்று சொல்லப்பட்டாலும், அது மற்ற மிருகங்களிலும் பரவியுள்ளது.

சரியாக வேகாத இறைச்சியின் மூலமும் இந்நோய் பரவக்  கூடிய சாத்தியம் இருக்கலாம்  என்பதால் சரியாக வேகாத இறைச்சி உணவு வகைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.