Home இந்தியா மக்களின் நலன், நாட்டின் நலனே மோடி அரசின் கொள்கை – அமித் ஷா பேச்சு

மக்களின் நலன், நாட்டின் நலனே மோடி அரசின் கொள்கை – அமித் ஷா பேச்சு

974
0
SHARE
Ad

amit shahகொல்கத்தா, செப்டம்பர் 8 – மக்களின் நலன், நாட்டின் நலனே மோடி அரசின்  கொள்கையாக உள்ளது என  பாஜக  தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி  பேரணியில் அமித் ஷா பேசியதாவது, “தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க்  உள்ளிட்ட அண்டை நாட்டு தலைவர்களை அழைத்து புதிய தொடக்கத்தை  ஏற்படுத்தினார் மோடி.

பாகிஸ்தானுடன் வெளியுறவு செயலர்கள்  நிலையில் பேச்சுவார்த்தை என்று நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார்.  ஆனால், காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் தூதர் பேசியதால்,  பேச்சுவார்த்தையை ரத்து செய்தார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் நமது எல்லையை  பாதுகாப்பது, நாட்டின் நலனே முக்கியம் என்பதை மோடி  உணர்த்தியுள்ளார்.  நீண்ட காலத்துக்குப் பிறகு, சிறந்த வெளியுறவுக் கொள்கையை கொண்ட  அரசு மத்தியில் தற்போது அமைந்துள்ளது.

அனைத்து மக்களின்  தேவைகளை புரிந்து கொண்டு செயல்படும் அரசு, 100 நாட்களில்  மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. விலைவாசியை குறைத்தது,  கருப்பு பணத்தை கொண்டு வர முயற்சி என பல்வேறு நடவடிக்கைகள்  இந்த 100 நாட்களில் செய்யப்பட்டுள்ளது.

நமது வாழ்க்கையில்  மாற்றத்தை கொண்டு வருவார் என்று மக்கள் கூறும் தலைவராக மோடி  உள்ளார் என்றார் அமித் ஷா.