Home இந்தியா மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் சோனியா காந்தி!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் சோனியா காந்தி!

463
0
SHARE
Ad

sonia-rahul-ganshiபுது டெல்லி, செப்டம்பர் 8 – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2011-ம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அமெரிக்காவுக்கு சென்ற அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு நாடு திரும்பிய அவர் அதிகமாக சுற்றுப்பயணம் செய்வதை குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் அவர் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து அமெரிக்கா சென்றார். அவர் திரும்பி வரும் வரை கட்சி பணிகளை அவரது மகனும், கட்சியின் துணை தலைவருமான ராகுல் காந்தி கவனித்துக் கொள்கிறார்.

#TamilSchoolmychoice

சோனியா வரும் 17-ம் தேதிக்குள் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. சோனியா நியூயார்க் நகரில் மருத்துவர்களை சந்திக்கிறார். சோனியாவுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளது.

அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக அவர் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.