Home நாடு மலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் – “மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்”

மலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் – “மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்”

1429
0
SHARE
Ad

K.Balamurugan (2)

கோலாலம்பூர், செப்டம்பர் 8 – நாடறிந்த பிரபல எழுத்தாளரும், ஆசிரியருமான கே.பாலமுருகன் (படம்) சிறுவர்களுக்கென பிரத்தியேகமாக “மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்” என்ற மர்ம நாவலை எழுதியுள்ளார்.

மலேசிய நாட்டில் தமிழில் வெளிவரும் முதல் சிறுவர் மர்ம நாவல் என்ற பெருமைக்குரிய இந்த படைப்பு, ‘ஹாரி பாட்டர்’ கதைகளைப் போல் பல சுவாரஸ்யமான, விறுவிறுப்பான திருப்பங்களை கொண்டது. இத்தகைய சிறப்புகளைக் கொண்டிருக்கும் இந்த நாவலின் விலை 10.00 ரிங்கிட் மட்டுமே.

#TamilSchoolmychoice

தமது படைப்பு குறித்து கே.பாலமுருகன் செல்லியல் தகவல் ஊடகத்திடம் கூறுகையில், “ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் இலக்கிய ஆற்றலையும் கதை எழுதும் ஆற்றலையும் வளர்க்க ஒவ்வொரு பள்ளியும் கட்டாயம் இந்த சிறுவர் நாவலை தங்களது மாணவர்களுக்கு வழங்க வேண்டும். வர்ணனைகள், காட்சிப்படுத்துதல், கதைக்களம் விவரிப்பு, கதாபாத்திரப் படைப்பு, பேச்சு வழக்கு எழுதுதல் போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள இதுவே சிறந்த வழிகாட்டி” இவ்வாறு தெரிவித்தார்.

இந்நாவல் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20 -ம் தேதி, கெடா மாநிலம் சுங்கை பட்டாணியிலுள்ள ‘தி கார்னிவல் வாட்டர் தீம் பார்க்’ என்ற இடத்தில், மாலை 5.15 மணி தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த விழாவிற்கு கெடா மாநில கல்வி இலாகாவின் மொழிப்பிரிவு உதவி இயக்குநர் திரு.பெ.தமிழ்ச்செல்வன் தலைமை வகிக்கவுள்ளார்.

மேலும், இந்த நாவல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்குச் சிறப்பான பரிசுகள் வழங்கப்படும் என ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

K.Balamurugan

இந்நாவலை பெறவும், நிகழ்ச்சி குறித்த மேல்விபரங்களுக்கும் ஆசிரியர் திரு.கே.பாலமுருகனைத் தொடர்புக்கொள்ளலாம். 

நாவலாசிரியர் கே.பாலமுருகன், கடந்த 2011-ம் ஆண்டு தனது “நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்” என்ற படைப்புக்கு கரிகாலன் விருது பெற்றவர்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்கு வழங்கப்படும் உயரிய விருது ‘கரிகாலன் விருது’ என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் விபரங்களுக்கு:-

கே.பாலமுருகன் – 016 4806241

மின்னஞ்சல் முகவரி – bkbala82@gmail.com