Home கலை உலகம் கத்தி படத்துக்கு சரத்குமார் ஆதரவு! முதல்வரிடம் பேச விஜய்க்கு உதவி!

கத்தி படத்துக்கு சரத்குமார் ஆதரவு! முதல்வரிடம் பேச விஜய்க்கு உதவி!

567
0
SHARE
Ad

vijay-sarathசென்னை, செப்டம்பர் 8 – பெரும் சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் லைகா நிறுவனத்தின் கத்தி படத்துக்கு நடிகர் சங்க தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் ஆதரவளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கலிலிருந்து அந்தப் படத்தை வெளிக் கொண்டுவர உதவுவதாகவும், இது தொடர்பாக முதல்வரை விஜய் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளாராம்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு விசுவாசமான, அவரது உறவினர்கள் பங்கு வகிக்கும் நிறுவனம் என்பதால், லைகா நிறுவனம் தயாரிக்க, விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தை லைகா நிறுவனப் பெயரில் வெளியாக ஒருபோதும் அனுமதிக்க முடியாது என 65 அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இது தொடர்பாக மனுக்களை அனுப்பியுள்ளனர்.

kaththi-posters-fi-610x330கத்திக்கு ஆதரவு தேடி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் பலரிடமும் பேசி வருகின்றனர். ஏற்கெனவே நாம் தமிழர் கட்சியின் சீமான் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். லைகா நிறுவனத்தையோ, விஜய், முருகதாசையோ எதிர்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

அடுத்ததாக நடிகர் சங்கத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் இந்தப் படத்தை சிக்கலின்றி வெளியிட உதவுவதாக உறுதியளித்துள்ளாராம். மேலும் இதுகுறித்து முதல்வரைச் சந்தித்துப் பேச அழைத்துப் போவதாக விஜய்யிடம் கூறியுள்ளாராம் சரத்குமார்.