Home நாடு செப்டம்பர் 14-ம் தேதி “செலாஞ்சார் அம்பாட்” – அறிமுக நிகழ்வு!

செப்டம்பர் 14-ம் தேதி “செலாஞ்சார் அம்பாட்” – அறிமுக நிகழ்வு!

558
0
SHARE
Ad

செலாஞ்சார் அம்பாட்கோலாலம்பூர், செப்டம்பர் 10 – அண்மையில் தேசிய நில நிதிக் கூட்டுறவு கழகத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசளிப்பு விழாவில் 10,000 ரிங்கிட் பரிசு பெற்ற கோ.புண்ணியவான் அவர்களின் “செலாஞ்சார் அம்பாட்” நாவல் அறிமுக விழா வரும் செப்டம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.30 மணிக்கு, டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் “செலாஞ்சார் அம்பாட்” நாவல் கருத்துரையை முனைவர் ரெ.கார்த்திகேசுவும், எதிர்வினைகள் சிறுகதை நூல் குறித்த கருத்துரையை முனைவர் கிருஷ்ணன் மணியமும் வழங்கவுள்ளனர்.

மேலும், இந்நூல் அறிமுக விழாவிற்கு ஆசிரியர் முனியாண்டி ராஜ் வரவேற்புரை ஆற்றுகிறார். மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார்.

#TamilSchoolmychoice

திரு. அய்வன் அய்யாவு மற்றும் திரு.ஆர்.முருகன் ஆகியோர் முறையே முதல் நூல் பெறுநர் மற்றும் சிறப்பு நூல் பெறுநராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த நூல் அறிமுக விழாவில் அனைத்து வாசகர்களும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.