Home உலகம் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர்கள் உணவு பஞ்சத்திற்கு வழிவகுக்கும்!

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர்கள் உணவு பஞ்சத்திற்கு வழிவகுக்கும்!

649
0
SHARE
Ad

gaza-isrealலண்டன், செப்டம்பர் 10 – மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர்களினால், உலகின் உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய கிழக்கு பகுதிகளாக உள்ள சிரியா, லெபனான், ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் தொடர் யுத்தங்களால் புதிய உணவு வகைகள் தயாரிக்கத் தேவைப்படும் காட்டுப் பயிர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கில் வீட்டுப் பயிர்களில் மரபணு மேம்பாடுகளை ஏற்படுத்த உதவும் காட்டுப்பயிர்களின் வளங்கள் அதிகம் உள்ளன. எனினும் இதன் வளர்ச்சி தற்போதைய நிலையில் அழிவுப் பாதையில் உள்ளது.

#TamilSchoolmychoice

சமீபத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பின் படி காட்டுத் தாவரங்களில் 21 சதவிகிதம் அழிந்து விட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் நிகெல் மேக்ஸ்டெட் கூறுகையில்,

palestine“ஈராக், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் பயிர் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நைல், டைக்ரிஸ், யூப்ரடிஸ் போன்ற நதிகளாகும். வளமிக்க பகுதிகளாக இருந்த இந்த இடங்களில் வளரும் பயிர்கள் மரபணு மாற்றங்களுக்குப் பெரிதும் உதவி புரிந்தன.

எனினும் தற்போது நடைபெற்று வரும் தொடர் உள்நாட்டு யுத்தங்களால் அந்த பயிர்கள் அழிவின் விளிம்பில் உள்ளன” என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாமல் இருக்க   வேண்டுமென்றால், அந்நாடுகளின் உணவு உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் மத்திய கிழக்குப் பகுதிகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.