Home இந்தியா குஜராத்திலும் வெள்ளம்! 5000 மக்கள் வெளியேற்றம்!

குஜராத்திலும் வெள்ளம்! 5000 மக்கள் வெளியேற்றம்!

799
0
SHARE
Ad

karnataka1குஜராத், செப்டம்பர் 10 – காஷ்மீரை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் முக்கிய நதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசித்த 5,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் வதோதரா , சூரத், நர்மதா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 24 மணி நேரத்தில் 15 செ.மீ வரை மழை கொட்டியுள்ளது.

நர்மதா, விஸ்வமித்ரா, தபி, மகி உள்ளிட்ட பல நதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வதோதரா மாவட்டத்தின் பல இடங்களில் ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

#TamilSchoolmychoice

இதையடுத்து வதோதரா மற்றும் பரோடா மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் வசித்த 5,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

kashmir,126 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் சரோவர் அணை நிரம்பி வழிவதுடன் வதோதரா அருகே உள்ள ஹாஜ்மா அணையின் நீர்மட்டம் அபாய அளவான 215 அடி உயரத்தை தாண்டியுள்ளது.

அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மற்றும் தொடர் மழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளன. கனமழை நீடிப்பதால் மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெள்ள நிலவரம் தொடர்பாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய குஜராத் முதலமைச்சர் ஆனந்தி பென் பாட்டேல் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

kujarathமழை வெள்ளத்தால் 125 கிராமங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 27 நெடுஞ்சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நர்மதா உள்ளிட்ட முக்கிய நதிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பது குஜராத் மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.